Breaking News

அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி ஸ்ரீ பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் கோவிலில்  அத்தெருவாசிகளால் ஆயிரம் நபர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய  சமபந்தி விருந்து அளிக்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஆண் வாரிசுகளுக்கு அதிபதியாய் திகழக்கூடிய ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதும், அவ்வேளையில் சமபந்தி உணவு அளிப்பதும் வழக்கம். 



ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாய் கொரோனா கட்டுபாடு  காரணமாக இந்நிகழ்வு நடத்தப்படாமல் இருந்தது.



இந்நிலையில் இவ்வாண்டு எவ்வித கொரோனா கட்டுபாடுகள் இன்றியும் தமிழக அரசானது விநாயகர் சதுர்த்தி பெருவிழாவினை விமரிசையாக கொண்டாடிட அனுமதி வழங்கியுள்ளது.



இதனைதொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை ஒட்டி   இக்கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீபொய்யாமுடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று,  7அடி உயரம் கொண்ட விநாயகர் திருஉருவ சிலையும் அமைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மேலும் இவ்விழாவினையொட்டி இன்று அத்தெருவார்களின் சார்பில் ஆயிரம் நபர்களுக்கு இனிப்பு,வடை,பாயாசம் உட்பட 12வகைகளான அறுசுவை  உணவுகளுடன் கூடிய  சமபந்தி விருந்தினை சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் துவக்கி வைத்தார்.



மேலும் இந்த  சமபந்தி உணவு விருந்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு அத்தெருவாசிகள் தங்களது கைகளினால் உணவுகளை பரிமாறி மகிழ்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

தொருவாசிகளால் ஒற்றுமையாக போடப்பட்ட விருந்தினை அங்கு வந்திருந்த அனைவரிடையேயும் பெரும் நெகிழிச்சியை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments