Breaking News

ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆப்த மித்ரா (ஆபத்து கால நண்பன்) திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு  பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது.


தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆப்த மித்ரா (ஆபத்து கால நண்பன்) திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சியினை வழங்க திட்டமிட்டப்பட்டு அவர்களுக்கு நிலச் சரிவு, வெள்ளம், சுனாமி,  இடி மற்றும் மின்னல் அடிப்படை தேடல் மற்றும் மீட்பு போன்ற 26 தலைப்புகளில் பேரிடர் காலத்தில் உடனடியாக சென்று பொது மக்களை உரிய முறையில் மீட்கும் வகையில் அவர்களை தயார் செய்யும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஊரக சுகாதாரத் துறை, மாநில பேரிடர் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இணைந்து ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

மேற்படி பயிற்சிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24.08.2022 முதல் காஞ்சிபுரம் வட்டத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரி, திம்மசமுத்திரம் தொடங்கப்பட்டு, குன்றத்தூர் வட்டத்தில், மாதா பொறியியல் கல்லூரி, காவனூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, பென்னலூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் உத்திரமேரூர் வட்டத்தில் 12.09.2022 வரை மீனாட்சியம்மாள் கல்வியியல் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேற்படி, பயிற்சி முடிவில் பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் அடிப்படை மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments