Breaking News

அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா... சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்...




திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  தமிழக முதல்வரிடமும் நான் படிக்கும் பள்ளியில் உடன் பயிலும் மாணவர்கள் யாரும் என்னுடன் பேசுவதில்லை என்றும் சிகிச்சை அளித்து என் முகத்தை சரி செய்ய உதவி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



இதனைத்தொடர்ந்து தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. 

அதேபோல் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை முடிந்தது. மொத்தம் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்திருந்தது. 

இதைதொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி டான்யா வைக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி தான்யா இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் நாசர் தெரிவிக்கையில், 

இந்தியாவிலேயே 9 வயது குழந்தைக்கு இதுபோன்ற அறுவை முதல்முறையாக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் அவலக்குதல் குரல், 16 தேதி அரசு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட சிகிச்சையில் பூரண குணமடைந்து மாணவி வீடு திரும்பியுள்ளார் . இன்னும் ஒரு சில மாதங்களில் முழுமையாக மாணவி குணமடைவார் என தெரிவித்தார்.


இது குறித்து டானியா கூறுகையில் 

முதலமைச்சர் ஐயா தான் கேட்டவுடன் நடவடிக்கை எடுத்தார். அமைச்சர் நாசர் அய்யாவிற்கும் நன்றி. வீட்டிற்கு போக இருப்பதால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தினமும் பள்ளிக்கூடம் செல்வேன் முதலமைச்சர் அய்யாவின் பெயரை காப்பாற்றுவேன்.  தினமும் அமைச்சர் நாசர் என்னை சந்தித்து விட்டு சென்றார் என்று கூறினார்.

No comments

Thank you for your comments