Breaking News

பொன்னேரி ஏரி கரை நீர் நிலை ஆக்கிரமிப்பு 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் பொன்னேரி ஏரி கரை நீர் நிலை ஆக்கிரமிப்பு 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணி தீவிரம் நடைபெற்றுவருகிறது.


தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவினை தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். 



உயர் நீதிமன்ற உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் நகரை ஓட்டி உள்ள  பொன்னேரி ஏரி நீர்நிலை கரைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள 82 வீடுகளை அகற்றும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. 


வீடுகளை அகற்றுவதற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளை மறித்து அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுனர். 

வீடுகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிக்கப்பட உள்ள வீடுகளில் புகுந்து வீட்டு உபயோக பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி  தொலை தூரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் அடைந்து வைக்க அனுப்பி வருகின்றனர். 

இதன் காரணமாக  ஏகாம்பரநாதர் கோயில் வடக்கு மாட வீதி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

No comments

Thank you for your comments