உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி
காஞ்சிபுரம்:
உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் உட்பிரகாரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாகவம், துர்நாற்றம் வீசுவதாகும் பக்தர்கள் பெரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக ஏகாம்பரநாதர் திருக்கோயில் விளங்குகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் சுற்றி பார்த்தும் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக ராஜகோபுரம் உட்பிரகார்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் செல்லும் வழியில் குவியல் குவியிலாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
இந்த குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறார்கள். மழைகாலம் என்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை அப்புறப்படுத்த தகவல் கொடுத்தும் இதுவரை வரவில்லை என்றும், மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றப்படாததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகசொலிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் பரவு அபாயம் உள்ளது.
இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி கோவிலை தூய்மைப்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செவிமடுக்குமா மாநகராட்சி.... பொறுத்திருந்து பார்ப்போம்...


No comments
Thank you for your comments