இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்... நீதிமன்றம் தீர்ப்பு .... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
எடப்பாடி கே பழனிச்சாமி நடத்திய பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுகரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே .யு .எஸ். சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி .ஆர். மணிவண்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலக்குமார், பகுதி கழக செயலாளர் என்.பி. ஸ்டாலின், பாலாஜி ,கோல்ட் ரவி, ஜெயராஜ், உள்ளிட்டோர் உள்ளனர்.



No comments
Thank you for your comments