44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி.. சிறப்புற பணியாற்றிய விழா குழுவினருக்கு பாராட்டு விழா
44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திட சிறப்புற பணியாற்றிய விழா குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழா சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டலில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 01.09.2022 மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக முதன்மை செயலாளர் திரு.இறையன்பு அவர்கள், திரு.உதயநிதி ஸ்டாலின், திரைப்பட நடிகர் திரு.கமல்ஹாசன், பிரபல இசையமைப்பாளர் திரு.ஏ.ஆர்.ரெஹ்மான், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், சதுரங்க போட்டி அமைப்பாளர்கள் அக்கியோர் கலந்து கொண்டு, 28.07.2022 முதல் 09.07.2022 வரை நடைபெற்ற FIDE 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியான மாபெரும் மைல்கல் நிகழ்வை நடத்துவதற்கு ஆற்றிய சிறந்த முயற்சிகள் மற்றும் கொடுத்த மதிப்புமிக்க பங்களிப்பை பாராட்டும் விதமாக பாராட்டுச்சான்றிதல் வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஐந்தாவதாக அழைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிய மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது.
இதில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிவரும் திரு.கா.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தது காஞ்சிபுரம் அலுவலக மற்றும் மக்களிடம் மகிழ்வை எற்படுதிள்ளது.
.jpg)


No comments
Thank you for your comments