திமுக முன்னாள் அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன்மொழியின் நினைவு நாள் அனுசரிப்பு...
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் 5-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சி.வி.எம் அண்ணாமலை அவர்களின் மகனும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக இருந்து மறைந்த சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்,நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் மகனும்,திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தனது குடும்பத்தினருடன் தனது தந்தையின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏழை ஏளிய மக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகர செயலாளர் தமிழ்செல்வன்,மேயர், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய,நகர,நிர்வாகிகள் ஏராளமானோர் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன்மொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.




No comments
Thank you for your comments