ஆட்டோமொபைல் ஓஇஎம் தொழிலாளர்கள் மாநாடு
காஞ்சிபுரம், ஆக 29 -
ஆட்டோமொபைல் ஓஇஎம் தொழிலாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் அகில இந்திய மாநாடு ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.
ஆட்டோமொபைல் ஓஇஎம் தொழிலாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் அகில இந்திய மாநாட்டிற்க்கு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கி வைத்துப் பேசினார்.
கர்நாடகா மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், அகில இந்திய துணைத் தலைவர்கள் உமேஷ், சாய்பாபு, சந்திப் குப்தா, தமிழ் மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், ஆர்.சிங்காரவேலு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹூண்டாய், யமஹா, நிசான், பிஎம்டபிள்யூ, அசோக் லேலண்ட், மகேந்திரா அண்ட் மகேந்திரா, வால்வோ, வால்வோ பஸ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நாளை மாநாடு நடைபெறும்.



No comments
Thank you for your comments