Breaking News

13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 350 இடங்களில் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வரும் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள்  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் காஞ்சிபுரம் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் குமரகோட்டை முருகன் கோவில் காமாட்சி அம்மன் சன்னதி தெரு உள்ளிட்ட மிகப்பெரிய கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு தீவிரதனை ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆனது நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும்  முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பக்தர்கள் வழிபடுவதற்காக 350 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் காஞ்சிபுரம் நகரில் வித விதமான பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனுமதி வழங்கிய இடங்களுக்கு மட்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments