Breaking News

சேலம் IIHT மாணவர்கள் சர்வதேச போட்டியில் சாதனை

சேலம், ஆக.22-

சேலம், ஓசினாவா கொஜூரயு சர்வதேச கராத்தே ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் சுமார் 1200 போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியானது சேலம் ஏ.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவில் நடைப்பெற்றது. 


இந்த போட்டியில், சேலம் இந்தியக் கைத்தறித் தொழில்நுட்பக்கழகம் மாணவர்கள் குமித்தே - 21 வயது பிரிவில் எஸ்.ஸ்ரீ ஹரி என்ற மாணவன் முதலாம் இடமும் மற்றும் கட்டா 20 வயது மற்றும் 24 வயது பிரிவுகளில் ஆர்.சுடலை மணிகண்டன் இரண்டாம் இடத்தையும் கே.நவீன்  மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை... 
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்... 
திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..

இதில் சிறப்பு விருந்தினராக கிராண்ட் மாஸ்டர் கே.ஆனந்தன், மலேசியா,  இந்தியா மற்றும் தமிழ்நாடு கராத்தே சங்க நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

வெற்ற பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி பயிற்சியாளர் ஏ.வடிவேல் ஆகியோரை கல்லூரியின் இயக்குநர் டாக்டர் அமின் ஹிரேன்பாய் நவின்பாய் மற்றும் கல்லூரியின் துணைபேராசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments