Breaking News

மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்

சமூக நல இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி ஒன்றிய அரசின் மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்புச் சட்டம்2007, பிரிவு 32 ன்படி தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவிதிகள் வகுக்கப்பட்டு 31.12.2009 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 



விதிமுறைகளின்படி அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிகாலம் 3 வருடம் கடந்த நிலையில் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை... 
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்... 
திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..

மாநில அளவிலான முதியோர்களுக்கான உயர்நிலை ஆலோசனைக் குழுவிற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை, முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும் முழு ஈடுபாடும் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25.08.2022 அன்று மாலை 05.45 மணிக்குள்  வரவேற்கப்படுகின்றன.


பிரதமருடன் சந்திப்புக்கான காரணம் என்ன? 
டெல்லியில்  செய்தியாளர் சந்திப்பில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம், முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்.044-27239334) அணுகவும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

 

No comments

Thank you for your comments