கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் பாராட்டினார்.
காஞ்சிபுரம் முசறவாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் 14.08.2022 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10th South Indian level Karate & Kuig-fu open championship போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு Dr.M.சுதாகர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் இது போன்று மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும், தற்காப்பு கலைகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் கராத்தே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் முரளி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

No comments
Thank you for your comments