துணை வட்டாட்சியர் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக துணை வட்டாட்சியர் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் சதீஷ்,இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
துணை வட்டாட்சியராகிய சதீஷ் மது போதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி சங்கீதா உடன் தகராறு செய்து வந்துள்ளார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கும் சென்று தங்கி உள்ளார். பின்னர் சதீஷ், மாமியார் வீட்டில் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்துகொண்டு மனைவியை தனது வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் கணவன் மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சங்கீதா தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து துணை வட்டாட்சியர் சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காத்தாடி வாழ்க்கை - குறும்படம்
விளையாட்டு வினையானது
திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கீதாவின் தாய் மற்றும் குடும்பத்தினர் புகார் அளித்ததின் பேரில் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து பதவி பெற்றார்... இபிஎஸ்-ஐ பங்கம் செய்த டிடிவி தினகரன்

.jpg)
.jpg)
No comments
Thank you for your comments