Breaking News

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.17-

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய- மாநில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 


ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 

மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து பதவி பெற்றார்...

 இபிஎஸ்-ஐ பங்கம் செய்த டிடிவி தினகரன்

ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், மாணவர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட தலைவர் கலை வாசம் ஆகியோர் வரவேற்றனர். 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 200&க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

No comments

Thank you for your comments