இலவச மருத்துவ சிகிச்சை முகாம் துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. சரஸ்வதி
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், சேவ் சைட் பவுண்டேஷன், ஈரோடு கிழக்கு அரிமா சங்கம், ஈரோடு விஷால் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (21.08.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் துவங்கப்பட்டது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார்.
நடைபெற்ற முகாமில் கண்ணில் புரை, மாறுகன், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், கிட்ட பார்வை, தூர பார்வை ஆகியவற்றிற்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்க விழா நிகழ்வில், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கொடுமுடி மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மற்றும் சி.கே.மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று (21.08.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சிவகிரி, சின்னியம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி. சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் கண்டறிதல், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தையின்மைக்கான மருத்துவ ஆலோசனைகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments