சர்வதேச அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற பிருந்தா, கௌசல்யா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவாரங்காடு பகுதியில் அகத்தியர் சிலம்பாட்ட கலைச் சங்கம் சார்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான முறையில் சுருள் வாள், சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிலும் மாணவ மாணவிகள் கடந்த 18, 19ம் தேதியில் நேபால், கோரக்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் பிருந்தா, கௌசல்யா ஆகியோர் 11 முதல் 14 வரை வயதுள்ள தனித்திறமை போட்டியில் கலந்துகொண்டு முதல் 2 பதக்கங்களை கைப்பற்றினார்.
அதன்பின் ஈரோடு ரயில் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களை வென்ற மாணவிகள் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அவர்களை நேரில் சந்தித்தனர். தாங்கள் பெற்ற கோப்பை மற்றும் தங்கப்பதக்கத்தை அவரிடம் காட்டி வாழ்த்து பெற்றனர்.
பதக்கம் வென்ற மாணவிகளை டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மனமார பாராட்டினார். அதே நாளில் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மாணவிகள் அவருடைய அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர் மாணவிகள் தங்கள் சொந்த ஊரான பள்ளிபாளையத்திற்கு வந்தடைந்தனர். அங்கு மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான பள்ளிபாளையம் பகுதியில் தாரை தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments