வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறதா தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்?
வேலூர், ஆக.1-
வேலூரில் தி சென்னை சில்க்ஸ் கிளை தொடங்கியபோது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் யுக்திகளை கையாண்டு, குறைவான விலையில் உயர்வான தரம் எனக்கூறினர். இதனால் வேலூரின் நம்பர் 1 ஜவுளிக்கடை என பெயர் எடுத்தனர். இந்நிலையில் கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவு வரத்தொடங்கியவுடன், தங்களது சுயரூபத்தை காட்ட தொடங்கினர். கவர்ச்சியான விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் நிறுவனத்தினர், தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான துணிகளை அளிக்காமல் ஏமாற்றுகின்றனர் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூரில் சமீப காலமாக, தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் சரமாரியாக புகார் கூறி வருகின்றனர். குறைவான விலை.. நிறைவான தரம்.. என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் உள்ளே சென்று பார்க்கும்போதுதான் அவர்களது ஏமாற்றுவது தெரிகிறது. குறிப்பாக புடவை பிரிவில் சாம்பிளுக்கு ரூ.200, 300 குறைந்த விலை புடவைகள் என வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் விற்கும் புடவைகள் ரூ.2 ஆயிரம் ரூ 3 ஆயிரம் வரை உள்ள புடவைகளையே விற்கின்றனர். அவ்வாறு விற்கும் சேலைகள் அனைத்தும் சூரத்தில் ரூ.200க்கும். 300க்கும் மற்றும் கிலோ கணக்கில் கிடைக்கும்... அவற்றைதான் தி சென்னை சிலக்ஸ் என்று குறியீட்டுப் பெயரில் (Brand Name) கொள்ளை லாபத்துக்கு விற்பதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளன..
காட்டன் புடவைகள், பூனம் புடவைகள், பாலிஸ்டர், சில்க் காட்டன் என பலவிதமான புடவைகள் வாங்கி கொஞ்ச நாட்களில் பொலிவு இழந்து காட்டி கொடுத்து விடுகிறது. 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து எடுத்த சேலை 2 வாரத்தில் சாயம் போய் சுருங்கி விடுகிறது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இந்த கண்கட்டு வித்தைகளை புரிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் தி சென்னை சில்க்ஸ் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து சென்னை சில்க்ஸிடம் வாடிக்கையாளர்கள் சென்று புகார் கூறினால் நீங்கள் துவைத்தவிதம் சரியில்லை என்று கூறி வாடிக்கையாளர்களை குறை கூறி விரட்டி அடிக்கின்றனர்.
இந்நிலையில் ஆடி மாத விழா, தீபாவளி, பொங்கள் என தொடர்ச்சியாக பண்டிகைகள் கொண்டாட டிவி சேனல்களை ஆன் செய்தால் உயர்ந்தபட்டு, விவாஹா பட்டு என பல விதமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்கின்றனர். ஆனால் அங்கு விற்பது அனைத்தும் ஒரிஜினல் பட்டா என்றால்... இல்லையென்ற என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 6 ஆயிரம் ரூ.10 ஆயிரம் என்றெல்லாம் குறைந்த விலையில் பட்டு என்பது போலியே.... ஒரிஜினல் என்ற வாடிக்கையாளர்களை அப்பட்டமாக ஏமாற்றுகின்றனர் என்பதே நிதர்சனம்...
சென்னை சில்க்ஸில் வேலூர் கிளையில் பட்டு புடவை எடுத்து ஏமாந்த பலர் யாரிடம் எங்கு சென்று புகார் கொடுப்பது என தெரியாமல் தவிக்கின்றனர். சென்னை சில்க்ஸில் கடந்த சில மாதங்களாக குறைந்த பட்ஜெட் விலையில் பட்டு சேலைகள் விற்பதாக கூறப்பட்டது.
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகசெஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா - முழு தொகுப்பு
ஆஹா... சென்னை சில்க்ஸில் துணிகள் தரமாக, உயர் ரகமாக இருக்குமே என்ற ஆசையில், பலர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பட்டுப் புடவைகளை எடுத்து செல்கின்றனர்.
வாடிக்கையாளர் ஏமாற்றம்
சுப நிகழ்வுகளின்போது, அவர்களது புடவையின் ஆடம்பரம் கண்டு வியந்த மற்ற பெண்கள் புடவை நல்லா இருக்கே எங்க எடுத்தீங்க எனக் கேட்க. அதற்கு அவர்கள் இது சென்னை சில்க்ஸ்-ல் எடுத்தது என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண் நல்லா ஏமாந்தீங்களா என கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஏமாந்தோமா? எப்படி எனக் கேட்டனர். இந்த புடவைகள் எல்லாம் அசல் பட்டு புடவைகளே அல்ல, செயற்கை இழைகளால் விசைத்தறிகளில் தயார் செய்யப்படும் போலி பட்டாகும். ஒரு ஆண்டுக்குள் சேலை பல்லை காட்டிவிடும் என்றார்.
எனவே இதைக்கேட்டு அப்ப நாம ஏமாந்துதான் போயிட்டோமா என வருந்தும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக நம்பி வரும் வாடிக்கையாளர்களிடம் டூப்ளிகேட் பட்டுப்புடவை விற்று ஏமாற்றுவதாகவும் சென்னை சில்க்ஸ் மீது புகார்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து மேலும் ஒரு வாடிக்கையாளர் கூறுகையில், திருமணநாள் பூஜைக்காக சென்னை சில்க்ஸ்ஸில் பட்டு புடவை எடுத்தோம்... பூஜை செய்வது முன் தண்ணீரில் நனைத்து பூஜை செய்யவேண்டும் என்பதால் நீரில் நனைத்து போது சாயம் போய் அந்த புடவை முழுவதும் அந்த சாயத்தால் பட்டுபுடவை மோசமாகிவிட்டது.. இதுகுறித்து சென்னை சில்க்ஸிடம் புகார் தெரிவித்தபோது தகாத முறையில் வாடிக்கையாளரிடம் பேசி அனுப்பினர்... இதுபோன்ற புகார்கள் வேலூர் தி சென்னை சில்க்ஸ் மீது குவிந்த வண்ணம் உள்ளன..
டெஸ்டட் சரிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகளை, “இது இந்த வகை சரிகை என்று உண்மையான விவரத்தை கூறி அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும்” என்று கைத்தறி மற்றும் துணி நூல் இணை இயக்குநர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக சீனத்து சரிகைகள் ஒரிஜினல் சேலைகளை விட பளபளப்பாகவும் எடுப்பாகவும் இருப்பதாலும், மக்கள் ஏமாந்து விடுகின்றனர். விலை குறைவாக விற்க வேண்டும் என்பதற்காக போலியான பட்டு சேலைகளை ஒரிஜனல் பட்டு சேலை என கூறி விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது சென்னை சில்க்ஸ் போன்ற பெயரெடுத்த கடைகளுக்கு அழகா? நம்பி வரும் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து ஜவுளித்துறை அமைச்சர் காந்தியின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றும் சென்னை சில்க்ஸ போன்ற பெரிய நிறுவனங்களின் கடைகளை இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம், ஆரணி, கே-ஆப்டெக்ஸ் போன்ற கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் பட்டு சேலைகளில் சில்க் மார்க், ஹாண்ட் லூம் லேபுள், ரேட்கார்டு, பட்டுப்புடவை நெய்த நெசவாளரின் விவரங்கள் அடங்கிய கார்டுகள் இருக்கும், ஆனால் சென்னை சில்க்ஸ் கடைகளில் விற்கும் சேலைகளில் சில்க் மார்க் தரமுத்திரை, ஹாண்டுலூம் முத்திரைகள் உள்ளதா என்றால் மில்லியன டாலர் கேள்வி தான்...
விலையில் மோசடி
பட்டுப்புடவைக்கு அதில் உள்ள வெள்ளி, தங்க சரிகைகளின் அளவு, எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும் ஆனால் போலியான புடவை என்றாலும் கண்ணை பறிக்கும் வகையில் இருப்பதால் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சேலைகளை ரூ.20 ஆயிரம் என ஏமாற்றுகின்றனர். பட்டு புடவைகள் தரம் அறிய காஞ்சிபுரத்தில் சென்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். எனவே சென்னை சில்க்ஸ் போன்ற பெரிய ஜவளி நிறுவனங்களில் தரம் அறியும் சாப்ட் வேர் அடங்கிய சிஸ்டம் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
டிவியில் சினிம மாடல்களை வைத்து கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுவதும் சமூக விரோத செயலே. எனவே தர நிர்ணய அதிகாரிகள் இதுபோன்ற பெரிய பெரிய கடைகளில் அவ்வப்போது விற்கப்படும் துணிகளின் விலை மற்றும் தரம் குறித்து தீடீர் ஆய்வு செய்ய வேண்டும்... தவறு செய்தது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எது ஒரிஜினல்?
பொதுவாக பட்டுப் புடவையில்... வெறும் 550 கிராம் மட்டுமே நூலின் எடை இருக்கவேண்டும். மீதம் இருப்பது சரிகையின் எடைதான். அதேபோல் ஒரிஜினல் ஜரிகை என்றால் அதில் 55 சதம் வெள்ளியும்... 0.6 சதம் தங்கமும்... மீதம் 44.04 சதம் காப்பர் கலந்த பட்டுநூலும் இருக்கவேண்டும். இப்படி தயாரிக்கப்படும் ஒரிஜினல் ஜரிகை கிராம் 32 ரூபாய்.. 33 ரூபாய்வரை ஆகும். இந்த ஒரிஜினல் ஜரிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டுப் புடவைதான் ஒரிஜினல் பட்டுப் புடவையாகும்.
ஆனால் இதற்கு பதில் கிராம் 2 ரூபாய்க்கு விற்கக்கூடிய... கெமிக்கல் மற்றும் பாலிஸ்டர் கலந்த போலி டெஸ்டட் ஜரிகைகளைக் கொண்டு சிலர் பட்டுப் புடவையைத் தயார் பண்ணி விற்கிறார்கள். இப்படி டெஸ்டட் ஜரிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டுப் புடவையே போலி பட்டுப் புடவையாகும்.
போலி பட்டு கண்டு பிடிப்பது எப்படி?
இதுகுறித்து பட்டு தறி நெய்யும் நெசவாளர்களிடம் கேட்டபோது, ஆரணி காஞ்சிபுரம், போன்ற பகுதிகளில் இருக்கும் நெசவாளர்களுக்கு பெங்களூரில் இருந்து பட்டு நூல் சப்ளை வருகிறது. அதேபோல அசல் ஜரிகை சேலைகள் என்றால் அவற்றில் வெள்ளி சரிகையில் தங்க மூலாம் பூசப்பட்டு வேலைப்பாடுகள் இருக்கும். ஆனால் சென்னை சில்க்ஸ் கடைகளில் விற்கப்படும் புடவைகளில் பெரும்பலானவை சீனாவில் இருந்து வரும் போலி சரிகையாகும், அவற்றை அசல் பட்டு சேலை என்றால் அதன் ஆரம்ப விலை ரூ.20 ஆயிரம் தான், அதைவிட குறைவாக தயார் செய்ய முடியாது.
போலியான பட்டு என்றால் அதன் சுங்கில் இருந்து ஒரு இழையை உறுவி, வத்தி குச்சியால் கொளுத்தினால் அது கையில் ஒட்டிக்கொண்டு பிசு..பிசுக்கும். அதே ஒரிஜினல் பட்டு என்றால் தீப்பட்டவுடன் எரிந்து சாம்பலாகிவிடும் என்று நெசவாளர்கள் கூறினர்.
“வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் துணி விற்பனை தரம்தான் கேள்விகுறி என்றால்... அங்குள்ள கட்டடம், பார்க்கிங் வசதி என அனைத்திலும் முறைகேடும் விதிமீறல்களும் அரங்கேறியுள்ளது. இடம் ஆக்கிரமிப்பு, அரசுக்கு வருமானம் இழப்பு என அடுக்கடுக்கான அத்துமீறல்கள் தொடர்கதையாக உள்ளது.. இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்...
வேலூர் தி சென்னை சில்க்ஸ்ஸில் மட்டும் விதிமீறல்களா? தமிழகம் முழுவதும் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனங்களிலும் விதிமீறல்களா? என்ற விசாரணையின் போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது...
விசாரணை தொடரும்... விரைவில் சென்னை சில்க்ஸ்ஸின் விதிமீறல்கள் பட்டியல்... நிருபர் டைரியில்...”

No comments
Thank you for your comments