Breaking News

அமைச்சர் .தா.மோ.அன்பரசன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக   கூட்டரங்கில் பரந்தூரில் அமைய உள்ள  பசுமை வெளி விமான நிலையம் தொடர்பான  பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி  விமான நிலையம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கிராம வாரியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம், தொடூர்  என 7 வருவாய் கிராமங்களும், திருப்பெரும்புதூர் வட்டத்தில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி ஆகிய 6 கிராமங்கள் என 13 கிராமங்கள் சேர்ந்த  பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கிராம வாரியாக பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்து, பதிவு செய்தனர். பொதுமக்கள் தங்களின் இடங்களுக்கு சரியான இழப்பீட்டுத்தொகை வழங்கி தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காமல் அரசு பார்த்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளனர்.

 வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

No comments

Thank you for your comments