Breaking News

அரசு மருத்துவர்களின் பணி நேரம் நீட்டிப்பு - அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்...

வாலாஜாபேட்டை :

2 மணி நேரம் பணி நீட்டிப்பு அரசாணை 225 ஐ திரும்ப பெற வலியுறுத்தி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ராணிப்பேட்டையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பொது சுகாதாரத் துறையின்கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேர நீட்டிப்பை திரும்ப பெற வலியுறுத்தி அரசு ஆரம்ப சுகாராத மருத்துவர்கள் 8 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன் படி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட கிளை சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டிக்கும் மருத்துவர் விரோத அரசாணை 225 ஐ திரும்ப பெற வலியுறுத்தி, ராணிப்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய முன்பு டாக்டர் வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு பணி நேரம் நீட்டிப்பு அரசாணை 225 ஐ திரும்ப பெற வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ்குமார்...

No comments

Thank you for your comments