Breaking News

நகர் ஊரமைப்பு துறையின் முக்கிய அறிவிப்பு

நகர் ஊரமைப்பு துறையின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதியில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டன. 

மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. 

இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அரிய வாய்ப்பு என்பதால் அதனை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக இணை இயக்குநர் அவர்கள் தொிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments