Breaking News

அதிமுக பொதுக் குழு இபிஎஸ் தேர்வு செல்லாது! - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை, ஆக.17-

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரியும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 அன்று நடந்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து 2 வாரங்களில் தீர்வு காண வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

பிரதமருடன் சந்திப்புக்கான காரணம் என்ன? 
டெல்லியில்  செய்தியாளர் சந்திப்பில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்தார்.ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த வாரம் 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 2 நாட்களில் விசாரணையை முடித்துக்கொண்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கினார்.


மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து பதவி பெற்றார்...
 இபிஎஸ்-ஐ பங்கம் செய்த டிடிவி தினகரன்

அந்த தீர்ப்பில், "அதிமுகவில் ஜூன் 23ம் முன் இருந்த நிலைதான் நீடிக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் பொதுக் குழுவை கூட்டத்தை நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

இதன்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அதிமுக பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக அதிமுக இடைகால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதாகிவிட்டது. அதே போல அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதும், அதே போல ஓபிஎஸ் தரப்பில் இருந்து நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் செல்லாது  என தற்போது ஆகியுள்ளது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  

உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இதன் காரணமாக ஓபிஎஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஓபிஎஸ் வீடு உள்ள பகுதியான கிரீன் வேஸ் சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,  மகத்தான தீர்ப்பு, மக்களின் தீர்ப்பு, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறினார். முழுமையான தீர்ப்பு வெளியாகவில்லை எனவே மேல் முறையீடு தொடர்பாக தற்போது கூற இயலாது என தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைப்பாளரின் கோரிக்கையை நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.

இபிஎஸ்க்கு பின்னடைவு

இந்த தீர்ப்பு ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இபிஎஸ்க்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.  இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில்  அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.  அதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், எம்சி சம்பத், பொன்னையன், ஆர்பி உதயகுமார், சி வி சண்முகம், இசக்கி சுப்பையா, ஜெயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி  பேட்டி

இதனை தொடர்ந்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் முழுமையான தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். 

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

ஆனால், பொதுக்குழு செயற்குழு கூட்டம் என்பது மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடத்தியதை போன்றே முறைப்படி நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். 

இதன் பின் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் 100 பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்கிறார். 

ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதராக உள்ளனர். இதனால் வழக்கின் தீர்ப்பில் பின்னடைவு என்பது இல்லை. ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார். 

No comments

Thank you for your comments