Breaking News

கையும் களவுமாக சிக்கிய வட மாநில இளைஞர்கள் இருவர் கைது...

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிள்ளைசத்திரம் பகுதியில் சுங்குவார்சத்திரம் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலிசாரை கண்டதும் இரண்டு வட மாநில இளைஞர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. 


தப்பியோடிய இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அருண்லென்கா , சௌமியா ரஞ்சன் மிஸ்ரா என்பதும்  பிள்ளைசத்திரம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு அங்கு பணியாற்றி வருபவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

காத்தாடி வாழ்க்கை -  குறும்படம்

விளையாட்டு வினையானது

மேற்படி வடமாநில நபர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் திரு. பரந்தாமன், காவலர் திரு. சுமன், காவலர் திரு. பாலசுப்பிரமணி  அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

No comments

Thank you for your comments