பரந்தூர் விமான நிலையம்: சிபிஎம் தலைவர்கள் கள ஆய்வு
காஞ்சிபுரம் :
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந் தூரில் அமைய உள்ளது. இதற்கான பூர்வாங்க வேலையை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சி புரம் மாவட்டம், பரந்தூர், நெல்வாய், ஏகனாபுரம், நாகல்பட்டி, சிங்கில்பாடி உட்பட 13 கிராமங்களில் 4800 ஏக்கர் நிலங்கள் கைய கப்படுத்தப்பட உள்ளது.
புதிய விமான நிலை யம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானதி லிருந்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலம், விவசாயம், குடி யிருப்புகளை அழித்துதான் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நாயனார் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, டி.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம், விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் செல்வம், வேலன் உள்ளிட்டோர் கிராம மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.


No comments
Thank you for your comments