Breaking News

சிறுவாணி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்...

கோவை:

சிறுவாணியில் மழை இல்லாததால், தண்ணீர் திறந்து விடுவதை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் நிறுத்தி  இருக்கின்றனர்.

கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. விலங்கினங்கள் தாகம் தீர்க்க, 5 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படும். இரு மாதங்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. அதனால், பாதுகாப்பு காரணங்களை கூறி, 150 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்


மழைப்பொழிவு குறைய ஆரம்பித்ததும், மதகு உயரத்தை கேரள நீர்ப்பாசனத்துறையினர் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தனர். சில நாட்களாக, மழையில்லாததால், 5 செ.மீ., உயரத்துக்கு மதகை கீழிறக்கி விட்டனர். 

விலங்கினங்கள் தாகம் தீர்க்க, வழக்கமாக திறந்து விடும் தண்ணீர் மட்டும் செல்கிறது. நேற்றைய தினம் அணையின் நீர் மட்டம், 43.78 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments

Thank you for your comments