75வது சுதந்திர தின விழாவில் 52 பயனாளிகளுக்கு ரூ.1,19,92,239 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து 52 பயனாளிகளுக்கு ரூ.1,19,92,239 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறை மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
காவல் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மருத்துவத்துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.30,000/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,10,000/- மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24,355/- மதிப்பீட்டில் தேய்ப்பு பெட்டிகள்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.14,946/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.19,70,000/- மதிப்பீட்டில் டயர் வியாபாரம், பெயிண்ட் வியாபாரம், தையல் தொழில்,
மண்பாண்டங்கள் தயாரித்தல் தொடங்குவதற்கான உதவிதொகையும், தாட்கோ அலுவலகத்தின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.5,70,819/- மதிப்பீட்டில் (ஆட்டோ, எலக்ட்ரானிக்கடை, பல்பொருள் அங்காடி வழங்குதல்) தொழில்முனைவோர் திட்ட உதவித்தொகையும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.8,250/- மதிப்பீட்டில் பாரம்பரிய நெல்விதை விநியோகம் மற்றும் நெகிழிகூடை வழங்குதல், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.13,600/- மதிப்பீட்டில் இடுபொருட்கள் (மா கன்றுகள், கொய்யா, கத்திரி, மிளகாய், கனகாம்பரம், ரோஜா, மிளகாய் நாற்றுகள்) ஆகியவைகளையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.9,90,269/- TNIAMP Scheme-க்கும்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.37,50,000/- குடியிருப்பு வழங்கும் ஆணை, வருவாய் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.10,000/- இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகையும்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.44,00,000/- மதிப்பீட்டில் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் தொகைகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு ரூ.1,19,92,239/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை தலைவர் திருமதி.சத்தியப்பிரியா, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.




No comments
Thank you for your comments