Breaking News

60% மானியத்துடன் கடனுதவி... அறிவிப்பு..

 உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை   காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம்  பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும்  மாண்புமிகு  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி/மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிற்து.


குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்  ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.12.00 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு  அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம்  மற்றும் வளர்த்தல்) ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு  மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ. 15.00 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

மீன்விற்பனை அங்காடி (அலங்கார மீன்வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ. 6.00 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.1.20 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.2.80 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  ரூ.4.20 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.2.80 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  ரூ.4.20 இலட்சம் வழங்கப்படவுள்ளது.



நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில்  மீன்வளர்த்திட  உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.1.60 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  ரூ.2.40 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில்ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில்  மீன்வளர்த்திட  ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.3.00 இலட்சம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம்  ரூ.4.50 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

கூண்டுகளில் கடல் மீன்வளர்த்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  செலவினமான ரூ.5.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.2.00 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

பயோபிளாக் குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  செலவினமான ரூ.18.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.7.20 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தினில் 0.5 ஹெக்டேருக்கான  செலவினமான ரூ.3.50 இலட்சம் செலவினத்தில் ஆதிதிராவிடர்  பிரிவினருக்கு 60% மானியம் ரூ.2.10 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான  செலவினமான ரூ.14.00 இலட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் ரூ.5.60 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு (1000 ச.மீட்டருக்கு) ஆகும் செலவினமான ரூ.36,000/-இல் 50%மானியம்  ரூ.18,000/-  வழங்கப்படவுள்ளது.

  எனவே இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115 (கைப்பேசி எண்.84891 89720) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன்  16.08.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments