வாகன விபத்து இழப்பீடு வழங்காததால்... 2 அரசு பேருந்துகள் ஜப்தி... மாவட்ட நீதிபதி இளங்கோவன் உத்தரவு
வாகன விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி மாவட்ட நீதிபதி இளங்கோவன் உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வில்லிவளம் ஊராட்சியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை பகுதியில் நடந்த விபத்தில் அரசு பேருந்து மோதி பலியானார் அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் ஏற்பட்ட சாலை விபத்தில் முத்து என்பவர் அரசு பேருந்து மோதி இறந்து விட்டார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இருவருக்கும் அசலும் வட்டியும் சேர்த்து சுமார் 34 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கண்ட தொகையை வழங்க தவறியதால் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி பொறுப்பு இளங்கோவன் அவர்கள் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இரண்டு பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் திருமண வைபவங்கள் அதிகம் உள்ள இந்த நிலையில் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது நீதிமன்ற வளாகத்தில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது
No comments
Thank you for your comments