முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு... விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் கலந்து கொள்ள அழைப்பு
மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள்/பெண்களுக்கு 15.07.2022 முதல் 16.07.2022 வரை பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.07.2022 அன்று காலை 9.00 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.
இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் .டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், தடகளம், கபாடி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் 15.07.2022 அன்று முதல் நாள் நடைபெறும். இரண்டாம் நாள் 16.07.2022 அன்று நீச்சல், பூப்பந்து, பளுதூக்குதல், டென்னிஸ், ஹாக்கி போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நடைபெற உள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 31.12.2021 அன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்த வேண்டும் (01.01.1997 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்) இதற்கான சான்றிதழ்களை மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். சான்றிதழ்கள் இல்லாதவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதார் கார்டு ஜெராக்ஸ் கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.2021 அன்று 25 வயது பூர்த்தி அடையாதவர்களாக இருத்தல் வேண்டும். 25 வயது பூர்த்தியானவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல், பளுதூக்குதல் போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் குழுப் போட்டிகளில் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து மாநில போட்டிக்கு அனுப்பப்படும் அணியின் வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான சான்றிதழ் (Ration card Xerox/Voter ID Xerox /driving License Xerox/School Marksheet Xerox) ஏதாவது ஒன்றினை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். சான்றினை சமர்ப்பிக்காதவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் சொந்த மாட்டத்திற்காகவோ (Native) பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ பள்ளி, கல்லூரியில் பயிலும் மாவட்டத்திற்காகவோ விளையாட்டில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான ஆதாரங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
ஆண்களுக்கான தடகளப் போட்டிகள் விவரம் – 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 5000மீ, 110மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும்,.
பெண்களுக்கான தடகளப் போட்டிகள் விவரம் – 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 3000மீ, 100மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும்,
ஆண்களுக்கான நீச்சல் போட்டி – 50 Mts Free Style, 50 Mts Back Stroke, 50 Mts Butterfly Stroke, 50 Mts Breast Stroke, 200 Mts Individual Medley, 100 Mts Free style, 400 Mts Free style, 800 Mts Free style. (8 Events).
பெண்களுக்கான நீச்சல் போட்டி – 50 Mts Free Style, 50 Mts Back Stroke, 50 Mts Butter fly Stroke, 50 Mts Breast Stroke, 200 Mts Individual Medley, 100 Mts Free Style, 400 Mts Free Style, 800 Mts Free Style. (8 Events).
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி – 55 kg , 61 kg, 67 kg, 73kg, 81 kg, 89 kg, 96 kg, 102 kg , 109 kg and +109 kg –( 10 events)
பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி – 45 kg , 49 kg, 55 kg, 59kg, 64 kg, 71 kg, 76 kg, 81 kg , 87 kg and +87 kg –( 10 events)மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனி நபர்/குழுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் அணி வீரர்/வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000/-, ரூ.750/- மற்றும் ரூ.500/- பரிசுத்தொகை வழங்கப்படும்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தனி நபர்/குழுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணி வீரர்/வீராங்கனைகளுக்கு தலா ரூ.1,00,000/- லட்சம், ரூ.75,000/- மற்றும் ரூ.50,000/-மும் பரிசுத்தொகை மற்றும் விளையாட்டுச் சீருடை வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையினை DBT (Direct Benefit Transfer) முறையில் வழங்க வேண்டியுள்ளதால் போட்டியாளர்கள் தங்களது பெயரில் உள்ள கணக்கு எண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினை ஜெராக்ஸ் எடுத்து கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும்.
தடகளம், நீச்சல் மற்றும் பளுதூக்குதல் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்கலாம்.. தடகளம், நீச்சல் மற்றும் பளுதூக்குதல் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டியில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் இணையதள முகவரி www.tnsports.org.in/wepapp/login.asps online Entry மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ (அல்லது) 7401703481 (அல்லது) 044-2722 2628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments