Breaking News

பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒலிம்பியாட் ஜோதி வருகை தந்த நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம்  விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி  வைத்தார்.



தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் 188 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில்  விளையாட்டு வீரர்கள்  ஒலிம்பியாட் ஜோதியினை ஏந்தி தொடர் ஓட்டம் விழிப்புணர்வு பேரணியை இன்று (26.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 

இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவலான் கேட், மேட்டுத்தெரு, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி  மற்றும் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வழியாக சென்று பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் விளையாட்டு வீரர்களிடம் இருந்து மாட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு, நடைபயணமாக சென்று மேடையில் உள்ள ஒலிம்பியாட் ஸ்டேண்டில் வைத்தனர்.

இப்பேரணியில் பள்ளி பயிற்சி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.  பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ, மாணவியர்களின் மால்கம், யோகாசனம், பரதநாட்டியம் போன்ற  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

 இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருசி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ராயா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் திரு.தேவேந்திரன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments