Breaking News

நீர் நிலைகளை புதுப்பிக்கவும், பராமாிக்கவும் தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகளை புதுப்பிக்கவும், பராமாிக்கவும் தொழிற்சாலை பிரதிநிதிகளுடன்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 சிப்காட், 2 சிட்கோ தொழிற் பூங்கா மற்றும் இம்மாவட்டத்தில் 2000ற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.

அதிவேக தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக,   மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊரணிகளில் இருந்து  தொழிற்சாலைகளின் நீர் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது.

மேலும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவநிலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருடத்திற்கு 52 மற்றும் 42 சதவீதம் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பருவமழை தவறுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கடந்த ஆண்டில் அதிகபடியான மழையால் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தை சந்தித்தது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதிகள் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தியது.

எனவே, தொழிற்சாலைகள் கூட்டாண்மை சமூக பொறுப்பாக (CSR) தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீர் நிலைகளை புதுப்பிக்கவும் மற்றும் பராமரிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  தொழில் நிறுவனங்களின்  பிரதிநிதிகள்,  அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஆலோசனைக்  கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி  பேசியதாவது,  

 ·  தடைசெய்யப்பட்ட (பிளாஸ்டிக்) நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும்,      சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவும்.

·         மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்தவும்,

·      தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமைபோர்வையை அதிகபடுத்துமாறும்

· தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி முறையாக கையாலுமாறும்  

· தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாடுமாறும்  

·    தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை  (ஏரி, குளம், குட்டை, ஊரணி) புதுப்பித்து மற்றும் பராமரிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.

  இவ்வாய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல்  பொறியாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments