Breaking News

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மறியல் போராட்டம்.

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



தமிழக மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் திமுக மக்கள் விரோத அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார் அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் பாஜக மாநில செயலாளர் டாக்டர் ஆர் ஆனந்த பிரியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் பதாகைகளை கையில் ஏந்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் பொதுச் செயலாளர்கள் டீ வாசன் பார்த்தசாரதி செல்வமணி ருத்ரகுமார் மாவட்ட துணை தலைவர்கள் கூறும் விஸ்வநாதன் ஆ.செந்தில்குமார் கார்த்திகேயன் ராஜகுமாரி காயத்ரி ஐயா துறை மாவட்ட செயலாளர் டிடி சரவணன், எல்லம்மாள் குணசேகரன், பட்டியல் அணி நிர்வாகி சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments