அங்கம்பாக்கம் பள்ளியில் தமிழ்நாடு நாள்- அனுசரிப்பு....
காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியில் தமிழ்நாடு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது..
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வர காரணமாக இருந்தோர் குறித்தும்
"தமிழ்நாடு நாள்" என ஜூலை 18 அறிவிக்க காரணமானவர் குறித்தும்..
தமிழ்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் குறித்தும்...
தமிழ்நாட்டிற்காக உழைத்த செந்தமிழ் செல்வர் மா.பொ.சி அவர்கள், சி.பா.ஆதித்தனார் அவர்கள்
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு அன்று நாடாளுமன்றத்தில் பேசிய மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் EX.MP. பூபேஸ் குப்தா அவர்கள்
தமிழ்நாடு என பெயர் மாற்றத்தை கொண்டு வந்த மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள்...
அண்ணாவின் இதயமாக செயல்பட்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்
மற்றும் தமிழ்நாடு என பெயர்வர காரணமாக இருந்த மற்றும் பல தலைவர்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது..
.jpg)
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments