தமிழ்நாடு நாள் -பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு நாள் -பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். மேலும் 44வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கவிட்டார்.
சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்ட இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18 (1967). ஆகையால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் புகழை போற்றும் வகையில் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் அடங்கிய ராட்சத விழிப்புணர்வு பலூனை குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகரட்சி மேயர் மகாலட்சுமி, ஆணையர் கண்ணன்,மண்டல குழு தலைவர்கள் சந்துரு,சசிகலா,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,வி.எஸ்.இராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் ,அரசு அலுவலர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments