Breaking News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத கருட சேவை உற்சவம் நடைபெற்றது.  கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான,உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம்,ஆனி மாதம், ஆடி மாதம், என  மூன்று கருட சேவை உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி  கருடாழ்வார் பிறந்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி ஆனி மாத கருட சேவை உற்சவம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.



ஆனி மாத கருட சேவை உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பச்சை பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டுடுத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டதை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க, வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர கோவில் பிரகாரத்திலும், நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார்.

தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு  சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

No comments

Thank you for your comments