காஞ்சிபுரம் அருகே மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2880 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2880 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல். திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு கைப்பற்றிய மதுவிலக்கு அமலாக்கத்துறை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம்,மாகரல் சுற்று வட்டார பகுதி வழியாக போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை மத்திய நுண்ணறிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாகரல் - சித்தாலப்பாக்கம் கிராம சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது காய்கறிகளை எடுத்துச்சொல்லும் பிளாஸ்டிக் கூடைகளை ஏற்றிக் கொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மினிலாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.
போலீசாரின் சோதனையில் மினி லாரியின் உள்ளே காய்கறி கூடைகளுக்கு கீழே 48 மதுபான பாட்டில்கள் கொண்ட 60 அட்டைப்பெட்டிகளில் போலி மதுபான பாட்டில்கள் உள்ளதை கண்டுபிடித்தனர்.
2880 போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்து மதுவிலக்கு அமலாக்கத்துறை மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியையும்பறிமுதல் செய்து, மினிலாரியை ஒட்டி வந்த பாலமுருகன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments