Breaking News

ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில்  ஒலி முஹம்மது பேட்டை -நகராட்சி நடுநிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட துணை தலைவர் பட்டூர் அசார் அவர்கள் பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இஸ்லாமிய மார்க்கத்தின் இரு பெருநாட்களும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாளும், ஹஜ் பெருநாளும் ஏழைகளுக்கு தர்மம் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைப் பின்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அறப் பணிகளைச் செய்து வருகின்றது.

இந்த நாளில் ஏழைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் ஹஜ் பெருநாள் அன்று ஆடு,  மாடுகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான ஏழை குடும்பங்களுக்கு இறைச்சிகளை வழங்கி உள்ளோம்.

மேலும் இந்த ஆடு, மாடுகளின் தோல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளையும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்து வருகின்றோம்.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 




சிறப்புத் தொழுகையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 1200 பேர் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்     மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

 


No comments

Thank you for your comments