அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் வேலை வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்கலாம்..
தாம்பரம் மற்றும் காஞ்சிபுரத்தில் இயங்கும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கும் கணினி ஆய்வகத்தில் கணினி பாடம் போதிக்க கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்" டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துதறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ/மாணவியர்களுக்கு கணினி பாடங்களை பயிற்றுவிக்கவும் கணினி இயக்குவதற்கான பயிற்சியளிக்கவும் மாதம் ரூ.15,000/ தொகுதிப்புதியத்தில் தொழிற்பயிற்றுநர்களை நியமனம் செய்வதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது.
கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எட்., கல்வித் தகுதியுடன் கீழ் குறிப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டும்
1. பி.இ. கணினி அறிவியல் (Computer Science)
2. பி.எஸ்.சி கணினி அறிவியல் (Computer Science)
3. பி.சி.ஏ. பட்டப்படிப்பு
4. பி.எஸ்.சி தகவல் தொழிற்நுட்பம் (Information technology)
மேற்கண்ட கணினி பயிற்றுநர் பதவிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இனத்தவரும் விண்ணப்பிக்கலாம் வயது உச்ச வரம்பு இல்லை
தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கும் கணினி ஆய்வகத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ/மாணவியர்களுக்கு கணினி பாடங்களை பயிற்றுவிக்கவும் கணினி இயக்குவதற்கான பயிற்சியளிக்கவும் மாதம். ரு.15,000/- தொகுதிப்பதியத்தில் பணிசெய்ய தகுதியுடையவர்கள் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சதாவரம். ஓரிக்கை அஞ்சல். காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு 15.07.2022 தேதி மாலை 5:00 மணிக்குள் தகுந்த கல்வி சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments