Breaking News

எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ்

எடப்பாடி, ஜூலை 21-

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனை அண்மையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரக் குழுவினர் இம் மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து மருத்துவ அலுவலர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கடந்த மாதம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனையின், மருத்துவ உள்கட்ட அமைப்பு, வளாகத் தூய்மை, உள் மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு பொது சுகாதார அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதனை பாராட்டும் வகையில், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேசிய தகுதி சான்று வழங்கப்பட்டுள்ளது. 



இதனால் 125 படுக்கைகள் கொண்ட இம் மருத்துவமனைக்கு  எதிர்வரும் மூன்றாண்டு காலத்திற்கு மேலும் கூடுதலான  நிதி ஆதாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் இப்பகுதியைச் சேர்ந்த உள் மற்றும் புற நோயாளிகள் கூடுதல் மருத்துவ சேவைகள் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் இச் சான்று பெற சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனையின் அனைத்து தரப்பு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பாலாஜி, இமாம், சுதாகர், ஷொப்னா உள்ளிட்டோர் சக ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments