அங்கம்பாக்கம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தி.தணிகைஅரசு அவர்களின் தலைமையில் கர்மவீரர் காமராசரின் 120வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கணித ஆசிரியை இலதா வரவேற்றார். இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இக்கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த கல்விசார் செயல்பாடுகளை தொடக்கநிலை மாணவர்கள் செய்துக்காட்டினர்.
காமராசரின் 120வது பிறந்தநாளையொட்டி அங்கம்பாக்கம் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 120 பேர் காமராசரின் முகமூடியை அணிந்து கொண்டு அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்..
மேலும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரப்புரை செய்யப்பட்டது. மாணவர்களும் வட்டார, மாவட்ட அளவில் நடைபெறவுள்ள செஸ் போட்டிகளில் பங்கேற்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பலராமன், கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் சேகர் செய்திருந்தார்.
ஆசிரியர்கள் சீனுவாசன், பொற்கொடி ஆகியோர் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்வில் கல்வியாளர் செங்குட்டுவன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுதா முருகேசன் , உறுப்பினர் வரதராஜ், பாவலன், ரீட்டா பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் லட்சுமி, முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியில் ஆசிரியர் கலைவாணன் நன்றி கூறினார்.


No comments
Thank you for your comments