2022-ல் தமிழகத்தில் 10,000 ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய தகவல்
சென்னை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டு 10,000 ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்யவுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்:
SCERT விரிவுரையாளர்கள் - 155 - ஜூலை 2022
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் - 1874 - செப்டம்பர் 2021
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் - 3987 - செப்டம்பர் 2022
கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 1358
பாலிடெக்னிக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 493
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 97
No comments
Thank you for your comments