திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தீவிரம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகரத்தில் நான்கு மண்டல பகுதிகள் உள்ளன.
இதற்கான பகுதி கழக நிர்வாகிகள் தேர்தல் வேட்பு மனு தாக்கல் மாவட்ட கழக அலுவலகமான, காஞ்சிபுரம் களைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகர மண்டல தேர்தல் நடத்த , தலைமை கழகத்தால் தேர்தல் ஆணையளாராக தலைமை கழக பிரதிநிதி ஈரோடு கே.ஈ. பிரகாஷ் அறிவிக்கபட்டார்.
இவரிடம் வேட்பு மனுக்களை தலைமைக் கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணம் செலுத்தி மனுக்கள் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து கழக நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்.பிராண்ட் கே.ஆறுமுகம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர் யுவராஜ், காஞ்சிபுரம் மாநகர அவைத் தலைவர் சந்துரு உத்தரமேரூர் ஓன்றிய செயலாளர் ஞானசேகரன் , உத்தரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் , காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


No comments
Thank you for your comments