Breaking News

கலைஞர் நூலகம் Vs எய்ம்ஸ்... மதுரையின் சாட்சிகள்: எம்பி., சு.வெங்கடேசன் ஒப்பீடு

சென்னை: 

“8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். அமைச்சர் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றும் மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், 

"அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம்…அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ் … இரண்டும் மதுரையின் சாட்சிகள்" என்று தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments