Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்...

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் (Juvenile Justice Board) காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst. cum Data Entry Operator) பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு கால ஒப்பந்தத்தின் பேரில் மாதம் ரூ.9000/- (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தட்டச்சு கணினி தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளைப் பெற்று விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியில் (https://kancheepuram.nic.in/) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சம்பந்தமான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு 15.7.2022 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 

“மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

எண் 317, காமாட்சி நிலையம், 

K.T.S மணி தெரு, மாமல்லன் நகர் 

(மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில்), 

காஞ்சிபுரம் 631502, 

தொலைபேசி எண் 044-27234950” 

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம். தேதி 25.06.2022 

No comments

Thank you for your comments