சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், படித்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.06.2022) இன்று துவக்கி வைத்தார்.
இம்முகாமில் 11 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்தினர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் திரு.அருணாகிரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி.செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments