Breaking News

திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம்

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இளைஞரணியனர் பங்கேற்றனர்.




அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி வரலாற்று சாதனை புரிந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்று கோவி.லெனின் பேசினார். 

அன்று நம் சங்கதியினர் யாரும் படிக்கவில்லை -இன்று நாம் விரும்பும் படிப்பை படித்து பட்டம் வாங்க வைத்தது திராவிட மாடல் -கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா போற்றினார்.



காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம் நகர செயலாளர் சன்பிராண்ட். கே.ஆறுமுகம் தலைமையிலும்,காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர, நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக்,மேயர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் பயிற்சி பாசறை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் கோவி.லெனின் பேசுகையில், பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கி வைப்பது ஆரிய மாடல் எல்லோரும் படிக்கலாம், எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்,

எல்லோரும் இயல்பு நிலைக்கு வரலாம் என்று அவர்களை தட்டி கொடுத்து ஊக்கப்படுத்துவதுதான் திராவிட மாடல்.மனிதனுக்கு ரத்தம் ஒரே நிறம் சிவப்பு தான் ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த அனைவருக்கும் ரத்தம் இரண்டு நிறம்,கருப்பு சிவப்பும் தான் நம்முடைய ரத்தம்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக சம்மாக அமர்ந்திருக்கும் மேடை நமக்கு கிடைத்ததில்லை ...



அன்றைக்கு மேடைக்கு அமர்ந்து இருந்தவர்கள் எல்லாம் நூல் கோர்த்தார் போல் சீராக அமர்ந்து இருந்தார்கள்,ஆனால் இன்று இந்த மேடையில் அமர்ந்து இருப்பவர்களிடம் ஜாதி வேறுபாடு இல்லை,மத வேறுபாடு இல்லை மிக முக்கியமாக பாலின வேறுபாடு இல்லை, ஆணுக்கு பெண் சமம் என்ற வாய்ப்பை வழங்கிய இயக்கம் தான் நம் இயக்கம்.

கழக ஆட்சி அமைந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்று,எல்லாம் சமூகத்தை சார்ந்த அனைவருக்கும் ஆகம பயிற்சி பெற்ற அனைவருக்கும் அவருக்கான வாய்ப்பை கொடுங்கள், கருவரைக்குள் அனுமதியுங்கள் என்று கேட்பது தான் திராவிட மாடல், அதைக் கேட்டதும் மட்டுமல்ல அதற்காக போராடியது மட்டுமல்ல ,அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அவர்களை அர்ச்சகராக்கி பார்க்கின்ற வரலாற்று சாதனையை புரிந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து  கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில்,திராவிட நாடு என்பது ஆதிகம்மற்ற சமுதாயம் அமைப்பது,அனைவரும் சமம்,மாநில சுயாட்சி, இந்தி ஆதிக்க திணிப்பை எதிர்ப்பது.

பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய போது சொன்னார் இன்று நான் நட்டு இருப்பது 

ஒட்டு மாஞ்செடி ,அது காய் கொடுக்கும், கனி கொடுக்கும் என்று நடவில்லை ,50ஆண்டுகளுக்கு பின்னர் இந்த செடி மரமாய் வளரும், வேர் விடும் ,கிளை விடும்,இலை விடும்,காய் விடும்,கனி விடும் ஆனால் அதை புசிக்க நான் இருக்க மாட்டேன்.ஆனால்,இதை 60 ஆண்டுகளுக்கு பின்னர் புசிப்பவன் தன்மானத்தோடு ,

தமிழன் மரபோடு வருவான் அதற்காக இந்த மரம் நடுகிறேன்.அதில் வருகின்ற கனிதான் நீங்களும் நானும்.

அன்று நம் அப்பா,தாத்தா, பாட்டன்,முப்பாட்டன் படிக்கவில்லை இன்று அவர் நட்ட மரம் மூலமாக நீயும் நானும் படித்து இருக்கிறோம் என்றால் அதுதான் திராவிட மாடல்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடைவர், தாயக தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்க்க செய்தவர் நம் கலைஞர்.

மேலும்,இஸ்லாமிய சகோதர்களுக்கு எதிராக சிஏஏ சட்டம் வந்த போது அந்த சட்ட நகலை எரித்து முதல் குரல் கொடுத்தவர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் .

ஆரிய மாடல் சமூகத்திற்கு எதிராக எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லியதோ அதை எல்லாம் செய்து காட்டியதற்கான பெயர் தான் திராவிட மாடல்.

அன்று குலத்தொழிலை செய்து வைத்தது ஆரிய மாடல் இன்று நீ வரும்பும் படிப்பை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்தது திராவிட மாடல் என பேசினார்.

No comments

Thank you for your comments