விதைகள் தன்னார்வ அமைப்பு தலைவர் சரணுக்கு பசுமை முதன்மையாளர் விருது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருது பெற்ற விதைகள் தன்னார்வ அமைப்பின் தலைவர் பசுமை சரணுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜைய் குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காஞ்சி அமுதன் அவர்கள் பங்கேற்று பாராட்டுப் பத்திரம் மற்றும் பரிசுகளை பசுமை சரண் வழங்கி சிரப்புரையாற்றினார்.
இதில் வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் வெங்கடேசன் அரிமா சசிகுமார், சீனிவாசன் , செந்தில் , சேஷாத்ரி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆய்வு மைய செயலாளர் நா. மோகனகிருஷ்ணன் வரவேற்புரை நல்க ஆதி பொறியியல் கல்லூரி பெராசிரியர் வெங்கடேசன் நன்றியுரை நல்கினார்.


No comments
Thank you for your comments