Breaking News

திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் பிகே சேகர்பாபு

காஞ்சிபுரம் :

உத்திரமேரூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு துவக்கி வைத்தார்.

கோவில் சொத்து வாடகை 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வு தொடர்ந்து, இதனை குழு அமைத்து ஆய்வு செய்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஓரிரு மாதங்களில் சரிசெய்யபடும் என அமைச்சர் பேட்டியளித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி முதற்கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து நிறைவடைந்துள்ளது.

இரண்டாவது கட்டமாக  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி இன்று முதல் துவக்கப்படுகிறது.

கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியை துவக்கி வைக்க வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

பின்னர். அதன்படி 50,001 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணியை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி் கே சேகர்பாபு துவக்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, 

முதற்கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் மீட்டு ரேடார் கருவி மூலம் அளவிடம் எடுத்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டப் பணி இன்று துவங்கி 66 குழுக்கள் உருவாகி மூன்று மாதங்களில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவிடும் பணி முடிவடையும். மேலும் இந்த பணி தொடரும்

கச்சத்தீவு மீட்பு குறித்து அவரவர் உரிமையை கூறுவதில் கருத்து கூற விரும்பவில்லை. முதலமைச்சர் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்பது மீனவர்களுக்கு உண்டான போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது, மீனவர்களின் ஜீவாதார உரிமை என கூறியிருக்கிறார். ஆகையால் மற்ற மாநிலத் தாளர்கள் அவர்கள் கூறியிருக்கிறார்.

கோவில் சொத்து வாடகை 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வு தொடர்ந்து, இதனை குழு அமைத்து ஆய்வு செய்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஓரிரு மாதங்களில் சரிசெய்யபடும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார்.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரைய்யா, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன்,சாலவாக்கம் குமார்,பேரூர் செயலாளர் பாரிவள்ளல், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணை தலைவர் இளமது கோவிந்தராஜன், தலைமை பொதுக்கழு உறுப்பினர் நாகன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments