அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் ஆணை
காஞ்சிபுரம் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் , காஞ்சிபுரம் கோட்டம் வாயிலாக தமிழக முதல்வரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனளிக்கும் ரூபாய் 2.10 லட்சம் நான்கு தவணைகளில் மானியமாக வழங்கப்படுகிறது.
இதனைப் பெற்றுக் கொண்டு பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அவ்வழியில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 930 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதில் 3774 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் , 2619 வீடுகள் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் , 892 வீடுகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்கப்பட உள்ள நிலையில், தற்போது மேலும் 695 பயனாளிகளுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு 695 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் திட்டப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 21 நபர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடிகுமார் , திமுக ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments