கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை - அண்ணாமலை
சென்னை, ஜூன் 14-
ஆவின் ஹெல்த் மிக்ஸ்ஸின் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை.
கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக பாஜக தமிழ்நாடு வெளியிட்டது.
அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி .
பாஜக தமிழ்நாடு வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
புத்துறையில் பாஜக தமிழ்நாடு அளித்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸ்ஸின் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
.jpg)
No comments
Thank you for your comments